136 நாடுகளிலிருந்து 63 மொழிகள் பேசும் அறிஞர் பெருமக்கள், தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் அழைக்கப்பட உள்ளார்கள்.
தமிழில் வெளிவந்த சிறந்த கவிதைகள், கட்டுரைகள், கதைகள் 63 மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்
தமிழ்ப் பத்திரிகை, காட்சி ஊடகம், சமூக ஊடகங்களுக்கு தனி அரங்கு
அமைக்கப்படும்
மன்றம், கழகம், சங்கங்களுக்கு தனி அமர்வு அமைக்கப்படும்
தமிழகம் தவிர, பிற இந்திய மாநில மற்றும் பிற நாடுகளில் உள்ள ஆயிரம் பள்ளி,
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அழைக்கப்பட
உள்ளார்கள்
பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படும்
இந்தியாவில் வெளிவந்த சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு,கதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு நூலுக்கு எனத் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும்
இந்தியா தவிர்த்து புலம்பெயர்ந்தவர்களின் சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு,கட்டுரைகள் தொகுப்பு, கதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு நூலுக்கு எனத்
தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும்
சிறந்த தமிழ்ச் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்படும்
தமிழர் உணவு, மருத்துவம், கலை, கைத்திறன் மற்றும் நெசவு வணிகம் போன்றவற்றிற்கு தனி அரங்குகள் அமைக்கப்படும்
தமிழரின் தொழில், பிற மாநிலத் தொழில், பிற நாட்டின் தொழில்கள் பற்றிய கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் போன்றவற்றிற்கு தனி அரங்குகள் அமைக்கப்படும்